Thursday, January 29, 2009

புளி உப்புமா

தேவையானவை:

அரிசி மாவு - 3/4 ஆழாக்கு (2 கப்)
புளி - 1 சின்ன உருண்டை
தண்ணீர் - 2 கப் (நார்மல் சைஸ்)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - முக்கால் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3

செய்முறை :

அரிசிமாவை புளிதண்ணீரில் உப்பு போட்டு கரைத்துவைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காயந்தவுடன் கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு, மஞ்சள்பொடி, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு கரைத்த மாவை விட்டு நன்றாகக் கிளறவும். கருவேப்பிலை போடவும். பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் கீழே எடுத்து வைக்கவும் .

Wednesday, January 28, 2009

ஹோட்டல் சாம்பார் பொடி

தேவையானவை :
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தாயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 4 டீஸ்பூன்
மிளகாய் - 10
பொட்டுக்கடலை - 50 கிராம்ஸ்
டோமடோ - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/4 மூடி
நார்மல் சாம்பார் பொடி - 2 () 3

செய்முறை:
மேற்கண்ட சாமான்கள் சேர்த்து நார்மல் சாம்பார் பொடி 2 () 3 ஸ்பூன் போட்டு நீர் விட்டு கரைக்கவும். கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்து விழுதை போட்டு லேசாக வதக்கி, நிறைய நீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் பச்சை கொத்தமல்லி சேர்க்கவும் .

முக்கிய குறிப்பு: புளி மற்றும் பருப்பு சேர்க்க தேவை இல்லை.

Wednesday, January 21, 2009

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே" என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்" என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்" போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே" என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்" என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்" என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்" என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஆபிசில் உங்களை பற்றி "கிசுகிசு' வராமல் இருக்க என்ன செய்வது?

* உங்களைப் பற்றி ஆபிசில் "கிசுகிசு' எழுவதற்கு, உங்களை அறியாமலேயே, நீங்கள ஏதாவது ஒருவகையில் காரணமாகி விட்டீர்களா என்று சுயபரிசோதனை செய்யுங்கள். எடுத்துக் காட்டாக, நம்மிடம் நன்றாகப் பேசுகிறார்களே என்று, குறிப்பிட்ட சிலநபர்களிடம் மட்டும் நீங்கள் சிரித்துப் பேசிபழகியிருந்தால், அவர்களிடம் மட்டுமின்றி, மற்றவர்களிடமும் அதே போன்று பேசுங்கள்; அல்லது உங்களிடம் அதிகம்பேசுபவர்களைத் தவிருங்கள்.

* ஆபிசில் இருக்கும் போது, உங்களது சொந்த மொபைல்போனே என்றாலும், அதிகம்பேசுவதை தவிருங்கள். இதனாலும், உங்கள் பெயர் ரிப்பேர் ஆகலாம்.

* உடன் பணியாற்றுபவர்களில், ஒரு சிலரை அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி என்று, நீங்கள் நினைத்துக் கொண்டுசகஜமாகப் பழகுவதை, சம்பந்தப்பட்ட நபர்களே கூட, வேறு விதமாகப் பரப்பலாம். எனவே, ஆபிசில் இந்த மாதிரியானஉறவு முறை கொண்டாடுவதை தவிருங்கள்.

* உடன் பணிபுரியும் ஆண்களிடம் பேசுவதில் தவறில்லை; ஆனால், பேசுவதற்கான எல்லையை சரியாக வகுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கூறாதீர்கள்; அதே போல், அவர்களின் குடும்ப விஷயத்திலும் அக்கறை காட்டாமல் இருப்பது நல்லது. உங்கள் இரக்க சுபாவத்தை தேவையற்றவிதத்தில் பயன்படுத்துவதை அறவே தவிருங்கள். இல்லாவிடில், அது உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றக் கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* நீங்கள் பேசும் நபரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். இப்படி கண்களைப் பார்த்து பேசுவதன் மூலம், அவர் உள்ளத்து அசைவுகளை ஸ்கேன் செய்ய முடியும். அதன்மூலம், நீங்கள் பேசும் நபர் நல்லவர்தானா, உங்களைப்பற்றிய அவரது எண்ணம் நல்லது தானா என்பதை அறிய முடியும். அதற்கு ஏற்றவாறு நீங்களும் நடந்து கொள்ளலாம்.

* உடன் பணிபுரியும் ஆண்களால் ஏற்படும், பாலியல் தொடர்பான பிரச்னைகளை முடிந்த வரை நீங்களே சமாளிக்கமுயலுங்கள். பிரச்னை, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, உயரதிகாரியிடம் புகார் செய்ய தயங்காதீர்கள்.

* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களைகொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படியாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.

* உடன் பணியாற்றும் ஆண்களிடம் கண்களால் பேசாதீர்கள். "எக்குத்தப்பான' அர்த்தமாகிப் போகும். இப்படி எல்லாம்நீங்கள் இருந்தும், உங்கள் பெயர் ரிப்பேரா? டோன்ட் கேர்... டேக் இட் ஈஸி! என்று உங்கள் பணியை தொடருங்கள்.

* இது போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெண்களின் சில தவறான அணுகுமுறை தான் ஆண்கள் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்று ஆண்கள் சொல்கின்றனர்.

அப்படிப்பட்ட பெண்ணாக நீங்கள் இருந்து விட்டால், அதனால் எழும் பிரச்னைகளை நீங்கள் தனி ஆளாக சந்திக்கவேண்டி வரும். உஷார்!

மூளையே முழிச்சுக்கோ!

மூளை, மனம் என்ற சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட. மருந்து, மாத்திரைகளைவிடவும் மனோரீதியான அணுகுமுறைகள் மூலமாக மூளையை ஆரோக்கியப்படத்துவதுதான் சாத்தியம்.... அழகு!

* ஒரு மனிதனின் மூளை ஆரோக்கியத்தோடு இருப்பதற்கான விதை, அவன் கருவுக்குள் இருக்கும்போதே போடப்பட வேண்டும். அந்த வகையில் கருவுற்ற பெண்களின் உடல், மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.

* பிறந்ததும் குழந்தை அழுதுவிட்டாலே, மூளை இயங்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். உரிய காலத்தில் தவழுதல், நடத்தல் ஆகியவை நடக்காவிட்டால் முதல் உதவிக்கு நாட வேண்டியது "நியூரோ' சம்பந்தப்பட்ட மருத்துவரைத்தான்!

* வலிப்பு நோய், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... அடிக்கடி வருகிற தலைவலியும்கூட சில சமயங்களில் மூளையில் ஏற்படும் பிரச்னைக்கான அலாரம்தான். தொடர் தலைவலி என்றால் தவறாமல் டாக்டரிடம் காட்டிவிடுங்கள்!

* ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!

* மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப-தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!

* சிறுகட்டி தவறி விழுவதால் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றை மருந்து போட்டு மறந்துவிவது சரியல்ல. தலையில் ஏற்படுகிற சிறு காயம் - உடனே தன் விளைவைக் காட்டாமல் பல வருடங்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்பதை உணருங்கள்!

* அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!

* கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.

* சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, "போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க" என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா" என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!

* ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!

Tuesday, January 20, 2009

பூண்டு மிளகாய் பொடி

தேவையானவை :
பூண்டு - 10 பல்
காய்ந்த
மிளகாய் - 1 கப் (100 கிராம்)
உளுத்தம்
பருப்பு - 100 கிராம் (தோல் () தோலில்லாமல்)

உப்பு

செய்முறை
:
உளுத்தம் பருப்பு சிவக்கும் வரை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் / refined oil சேர்த்து வறுக்கவும். பின்பு மிளகாய் வற்றலை (கருக்காமல்) 3 () 4 நிமடங்கள் வறுக்கவும். 1 டீஸ்பூன் உப்பு, தடிய பூண்டு மற்றும் வருத்த சாமான்களைச் சேர்த்து விறுவிறுவென்று பொடிக்க வேண்டும்.

குறிப்பு: இந்த கலவையை (அளவுகளைக் குறைத்து) தண்ணீர் சேர்த்து சட்னி போல அரைக்கவும்.

டோகளா

தேவையானவை :
கடலைமாவு - 4 கப்
கெட்டியான
மூர் - 3 கப்
உப்பு
- தேவையான அளவு
இஞ்சி
- சிறுதுண்டு
சாக்கரை
- 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6 - 8 நம்பர்
சமையல்
சோடா - சிறிது


செய்முறை :
இஞ்சியையும் பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும். இத்துடன் மற்ற எல்லாத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும் (சிறிது கெட்டியாக). குக்கர் separator-இல்சிறிது எண்ணெய் தடவை கலந்து சமையல் சோடா, எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் சேர்க்கவும். இதை இட்லி போல குக்கரில் வைத்து நீராவியில் வேக வைக்கவும். வெநதபின் வெளியில் எடுத்து diamond வடிவத்தில் தூண்டு போடவும்.

ஒரு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடகு, பருப்பு தாளித்து, அதில்டோகளா துண்டுகளாய் போட்டு மெதுவாகக் கிளறவும். அதன்மேல் துருவியதேங்காய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவவும். தொட்டுகொள்ள புதினா / மிளகாய் சட்னி.

புதினா புலாவ்

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
புதினா - 2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
ஏலம் - 2
லவங்கம் - 2
வெங்காயம் - 2
எழுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவைககு ஏற்ப


செய்முறை:
புதினா, மல்லி, மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காயை அரைத்துக் கொள்ளவும். குககரில எண்ணெய் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலம் தாளித்து அதில்நீளமாக நறுக்கிய வெங்காயம், 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, 3 டம்ளர் தண்ணீர்சேர்த்து அரிசி, உப்பு, எலுமிச்சை சாரு சேர்த்து கிளறி மூடி 1 விசில் வந்ததும் சிறுதீயில் 2 நிமிடம் வைத்து இறக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Saturday, January 17, 2009

பால் பாயசம்

தேவையானவை :
சின்ன டம்ளர் அரிசி / சின்ன கரண்டி சேமியா
பால் - 1 () 1 1/2 டம்ளர் (300 ml)
ஏலக்காய் - 2() 3
முந்திரிப்பருப்பு - தேவைக்கு ஏற்ப
ஜீனி - 100 கிராம் (150 ml)

செய்முறை :
நெய் விட்டு முந்திரியை வறுத்து முடித்து எடுக்கவும். பின் அரிசி () சேமியா ஓரளவு சிவக்கும் வரை வறுக்கவும். ஒரு பத்திரத்தில் 3 () 4 டம்ளர் வைத்து காய்ந்ததும் சேமியாவைப் போடவும்.

சேமியா என்றால் 3-4 நிமிடம் மற்றும் அரிசி என்றால் 20 நிமிடம் sim-இல்வைக்கவும்.

முக்கிய குறிப்பு: சேமியாவில் உள்ள தண்ணீர் வடித்து விட்டு பிறகு பால் மற்றபொருட்கள் சேர்ககவும். அரிசி என்றால் வடிக்க தேவை இல்லை.

லெமன் Sponge கேக்

தேவையான பொருட்கள்
பட்டர் - 70 கிராம்ஸ்
பவுடர் சுகர் (மிக்ஸீல பொடித்தது) - 85 கிராம்ஸ்
மைதா - 85 கிராம்ஸ்
baking பவுடர் / சோடா - 1 டீஸ்பூன்
லெமன் எஸ்ச்ன்ஸ் - 2 / 3 சொட்டு
மஞ்சள் கலர் - 1 / 2 சொட்டு
முட்டை - 2
வெதுவெதுப்பான பால் - 1 கப்


செய்முறை
  1. வெண்ணையையும் ஜீனிபவுடரையும் மிருதுவான கிரீம் ஆகும் வரைகலக்கவும்.
  2. மைதா மாவையும் baking பவுடரையும் கலந்து தனியாக வைக்கவும்.
  3. முட்டைககளை நன்கு அடித்து , இதை வெண்ணை, ஜீனிபவுடர் கிரீமுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நன்கு அடித்து வைக்கவும்.
  4. இதில் மைதாவை மெதுவாக போட்டு கலக்கவும். கொழ கொழவென்றுவரும்போது லெமன் எஸ்ச்ன்ஸ் சேர்க்கவும் .
  5. அதை baking mould-இல் ஊற்றி 180°C - இல் 15-20 நிமிடம் பேக் செய்யவும்.
  6. கேக் ரெடியானவுடன் அதன் மீது உங்களுககு விருப்பமான ஐஸ்யிங் (icing) செய்து கொள்ளவும்.